×

குளம், ஏரி, அகழி நீர்வழிப்பாதையை கண்டு ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும்

தஞ்சை, டிச.10: தஞ்சையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட பிரதிநிதித்துவ பேரவை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் கோதண்டபாணி தலைமை வகித்தார். மாவட்ட இணை செயலாளர் செல்வி வரவேற்றார். மாநில துணை தலைவர் மங்களபாண்டியன் தொடக்கவுரையாற்றினார். மாவட்ட செயலாளர் ரங்கசாமி வேலை அறிக்கையையும், மாவட்ட பொருளாளர் பாஸ்கரன் வரவு செலவு அறிக்கையையும் வாசித்தனர். மாநில செயலாளர் சண்முகம் நிறைவுரையாற்றினார். கூட்டத்தில், முன்னாள் மாநில தலைவர் சுப்பிரமணியன் பணி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும், ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெற வேண்டும். பறிக்கப்பட்ட அனைத்து உரிமைகளையும் உடன் வழங்க வேண்டும். கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை அமைக்க வேண்டும்.  பூதலூர் வட்டத்திற்கு புதிய சார்நிலைக் கருவூலம் அமைக்க வேண்டும்.

போக்குவரத்து நெரிசலை குறைக்க பட்டுக்கோட்டையில் மீதமுள்ள பைபாஸ் சாலை அமைக்க வேண்டும். தஞ்சையிலுள்ள பழமையான சின்னங்களை பாதுகாத்திட வேண்டும். குளம், ஏரி,அகழி, நீர்வழிப்பாதைகள் கண்டயறிப்பட்டு ஆக்கிரப்புக்களை அகற்ற வேண்டும். புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். பட்டுக்கோட்டை-தஞ்சை ரயில் திட்டத்தினை தொடங்க வேண்டும். கொரோனா நோய்தொற்று பணிகளில் ஈடுபட்டு இறந்த அரசு ஊழியர்களின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சமும், நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 2லட்சமும் வழங்க வேண்டும். பெண் அரசு ஊழியர்கள் மீதான பாலியல் வன்கொடுமையை தடுத்திடும் வகையில் விசாகா கமிட்டியினை தொடங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட துணை தலைவர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

Tags : pond ,lake ,moat waterway ,
× RELATED திருப்போரூரில் உள்ள நல்லான் குளத்தை...